தியேட்டருக்கு படம் பார்க்க போனது குத்தமா? ரசிகர்களால் தாக்கப்பட்ட ப்ளூ சட்டை மாறன்?

ajithfans bluesattaimaran pvrtheatre
By Edward Mar 18, 2022 09:07 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் எப்படி இருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வருவார்கள். ஆனல் தற்போது பல யூடியூப் சேனல்கள் இந்த வேலைகளை செய்து வருகிறது. அதில் ஒருவர் தா ப்ளூ சட்டை மாறன்.

படங்களை பற்றிய நிறை குறை என்ன என்பதை கூறுவது தான் விமர்சனம் செய்யும் முறையாக பலர் இதனை செய்து வருகிறார்கள். ஆனால் அவர் சமீபகாலமாக நடிகர் நடிகைகளின் உடலை பற்றிய கேலியை விமர்சித்து வருவதாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தினை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் உடலை பற்றியும் நடனத்தை பற்றியும் கேலி செய்யும் விதமாக கருத்துக்களை கூறி வருகிறார்.

இதற்கு பலர் எதிர்த்து குரல்களை கொடுத்து வந்தும் வருகிறார்கள். இந்நிலையுல் தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ள ப்ளூ சட்டை மாறனை மர்ம நபர்கள் அவரை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது அஜித்தின் ரசிகர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ப்ளூசட்டை மாறன் தன்னை தாக்கப்பட்டதாக் வெளியான செய்து பொய் என்று மறுத்துள்ளார். மறைந்திருந்து ஒருவர் போட்டோ எடுத்ததை இப்படியாக பப்ளிசிட்டி எனக்கு கொடுத்ததற்கு அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.

ஆனால் நெட்டிசன்கள் புகைப்படத்தை பார்த்தால் மரண அடி வாங்கி இருப்பது போல் தான் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.