இனி இப்படி செய்யகூடாது! அஜித்தை கண்டித்த தமிழக முன்னாள் முதல்வர்! இதுதான் காரணமாம்?
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த இரு ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீசாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்காகி வருகிறது. தற்போது நடித்து வரும் வலிமை படத்தில் எந்த அப்டேட்டும் இல்லாமல் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று கூவிக்கொண்டு வருகிறார்கள்.
எந்த படத்திலும் நடிகர் அஜித் ரிஸ்க் எடுத்து படத்தினை முடித்து கொடுப்பார். அந்தவகையில் சமீபத்தில் அனைத்து படங்களிலும் ஏதாவதொரு காட்சிகள் ஆபத்தாகி வருகிறது அஜித்திற்கு. வலிமை படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அமைந்துள்ளதாக படக்குழுக்கள் வீடியோ என்றை வெளியிட்டனர்.
இந்நிலையில் அஜித்தின் இப்படியான ரிஸ்க்கிற்காக முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதா அவர்கள் 2016ல் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது.
எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த செய்தி பழையதாக இருந்தாலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் இல்லை என்று பழைய நினைவுகளை வைரலாக்கி வருகிறார்களாம்.