சரிந்து விழுந்த அஜித்தின் 285 அடி உயர கட் அவுட்.. தியேட்டரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Ajith Kumar Viral Video Good Bad Ugly
By Bhavya Apr 07, 2025 09:30 AM GMT
Report

அஜித் குமார் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரியா வாரியர், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சரிந்து விழுந்த அஜித்தின் 285 அடி உயர கட் அவுட்.. தியேட்டரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Ajith Kumar Cut Out Fall Video

இன்னும் மூன்று தினங்களில் இப்படம் வெளிவர உள்ள நிலையில், ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் கட்-அவுட்கள் வைப்பது மற்றும் பேனர்கள் வைப்பது என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதிர்ச்சி சம்பவம் 

இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள PSS மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் அஜித் ரசிகர்களால் சுமார் 285 அடிக்கு கட்-அவுட் அமைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பலத்த காற்றில் கட்-அவுட் முற்றிலும் சரிந்து விழுந்தது. தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.