குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு
ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
படத்தை பிஸினஸ் செய்வதற்காக, 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கட் செய்து திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிடப்படும். அப்படி குட் பேட் அக்லி படத்தையும் படக்குழு திரையிட்டுள்ளனர். அப்போது படத்தை பார்த்து முக்கிய நபர்கள் மிரண்டு போய்யுள்ளனர்.
மேலும் படம் தரமாக வந்துள்ளது என விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். இதனால் தற்போது படத்தின் பிஸினஸும் தீயாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. இது படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக்கியுள்ளது.