ஹீராவை காதலிக்கத்தானே செஞ்சேன்..ஏன் மறைக்கணும்? நடிகர் அஜித் இப்படி சொல்லிக்காரே...
அஜித் - ஹீரா
நடிகர் அஜித்திற்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித் பற்றிய சில மெமரீஸ் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் நடிகை ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன் நடிகை ஹீராவுடனான காதல் குறித்து அஜித் கொடுத்த பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
காதலிக்க செஞ்சேன்
அதில் அஜித், நீ ஒரு நடிகன், உணர்வுகளை எல்லாம் இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது. இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஏன் இப்படி என்று எனக்கு புரியவில்லை. இமேஜ் என்றால் என்ன? நான் ஏன் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைக்க வேண்டும்.

நானும் ஹீராவும் காதல் செய்தோம் என்று எல்லாரிடமும் சொன்னேன். காதல்தானே செய்தேன். அது உயர்ந்த விஷயம் தானே? அதற்குப்பின் சில விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துவரவில்லை, பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம் என்று அந்த பேட்டியில் அஜித் கூறியிருக்கிறார்.