3 முறை திருமணம் செய்த நடிகர் அஜித் குமார்.. யாரும் அறியாத மறுபக்கம்
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். நடிப்பை தாண்டி தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார் அதிலும் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறார்.
இதை தவிர்த்து சில தினங்களுக்கு முன் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அஜித் குமார் குறித்து யாரும் அறியாத சில விஷயங்கள் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதாவது, நடிகர் அஜித்துக்கு சிந்தி மொழிதான் தெரியுமாம். அஜித்திற்கு சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் வரை தமிழ் மொழி தெரியாது என்று கூறப்படுகிறது.
3 முறை திருமணம்
அதுமட்டுமின்றி, அஜித் நடிகை ஷாலினியை 3 முறை திருமணம் செய்து கொண்டதாக தகவல் இணையத்தில் வலம் வருகிறது. அதாவது, ஷாலினி கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவர் என்பதால் தமிழ் முறைப்படி ஒருமுறை.
பின், கிறிஸ்தவ முறைப்படி ஒருமுறை, ஷாலினியின் தந்தை ஒரு இஸ்லாமியர் எனவே இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.