சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா நடிகர் அஜித்! இணையத்தில் லீக்கான புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். வலிமை படத்திற்கு பிறகு எச். வினோத், போனிகபூர் கூட்டணியில் ஏகே61 படத்தின் படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
அஜித் படம் என்றாலே ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகுவது கடினமான ஒன்று, ஆனால் ஏகே 61 படத்தின் நியூ லுக்கில் இருந்து அஜித் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் வரையிலான ஸ்டில்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
படத்தினை இந்த வருட தீபாவளிக்கு வெளியிடலாம் என்ற நோக்கில் தான் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லம் சென்று சந்திப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
திடீரென அப்புகைப்படம் வைரலாகி டிரெண்ட்டாக அனைவரும் ஏன் எதற்கு ரஜினியை சந்தித்தார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அப்புகைப்படம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று அஜித் தரப்பில் இருந்தும் ரசிகர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.