அருண் விஜய் படத்திற்கு இப்படியொரு நிலைமையா? வசூலில் அடிவாங்கிய ரெட்ட தல
Arun Vijay
Box office
Retta Thala
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் இந்த ஆண்டு இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான் ரெட்ட தல. இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 25ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், 3 நாட்களில் ரெட்ட தல படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் 1.8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
மூன்று நாட்களில் இவ்வளவு தான் வசூல் வந்துள்ளதா, அருண் விஜய் படத்திற்கே இப்படியொரு நிலைமையா என பலரும் ஷாக்காகியுள்ளனர்.