மிஸ் இந்தியா அழகிக்கு ஆசைப்பட்ட நடிகர்..உனக்கு எங்க பொண்ணு கேக்குதான்னு நடிகையின் பெற்றோர்..

Actors Bollywood Indian Actress Actress Model
By Edward Dec 28, 2025 07:30 AM GMT
Report

அங்கத் பேடி

இந்தி படங்களில் நடித்து பிரபலமான அங்கத் பேடி, 21 ஆண்டுகளாக படங்கள், வெப்தொடர்களில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை நேஹா தூபியாவை காதலித்து 2018ல் திருமணம் செய்து ஒரு மகன், ஒரு மகளை பெற்றார்.

இந்நிலையில் மனிஷ் பால் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய காதல் கதையை கூறியிருக்கிறார் அங்கத் பேட்.

மிஸ் இந்தியா அழகிக்கு ஆசைப்பட்ட நடிகர்..உனக்கு எங்க பொண்ணு கேக்குதான்னு நடிகையின் பெற்றோர்.. | Neha Dhupias Parents Questioned Angad Bedi

நேஹா தூபியா

டெல்லியில் இருக்கும் ஜிம் ஒன்று என் நண்பர்கள் அழைத்துச்சென்றபோது இப்படியொரு ஜிம்மை பார்த்ததே இல்லை. அங்கு டிரெட்மில்லில் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு ஃபிட்டான ஒரு பெண் ஓடிக்கொண்டிருந்தார். அவரை பார்ப்பதை பார்த்த நண்பர்கள், அவர் தான் மிஸ் இந்தியா அழகி நேஹா தூபியா என்று சொன்னதும் தொடர்ந்து 3 நாட்கள் ஜிம்முக்கு சென்றேன். பின் ஜிம்முக்கு போவதை நிறுத்திவிட்டேன். சில ஆண்டுகள் கழித்து என் நண்பர் யுவராஜ் சிங், மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு அழைத்து சென்றபோது அங்கு நேஹாவும் வந்திருந்தார். அவரை பார்த்து பேசினேன்.

மிஸ் இந்தியா அழகிக்கு ஆசைப்பட்ட நடிகர்..உனக்கு எங்க பொண்ணு கேக்குதான்னு நடிகையின் பெற்றோர்.. | Neha Dhupias Parents Questioned Angad Bedi

பார் மூடியப்பின் பார்ட்டியை என் வீட்டிற்கு மாற்றியோம். நீங்களும் வாங்களேன் என்று நேஹா தூபியாவை அழைத்தேன், அவரும் வந்தார். அப்போதுதான் நேஹாவிடம் முதன்முறையாக நன்றாக பேசினேன்.

டெல்லியில் நாம் ஒரே ஜிம்மில் தான் ஒர்க்கவுட் செய்தோம் என்று பழைய கதையை கூறியப்பின் தர்மா தயாரிப்பில் அன்கிலி படத்தில் நாங்கள் இருவரும் நடித்தோம். பின் மேலும் ஒரு படத்தில் நடிக்க முடியுமா என்று நேஹா கேட்க, நேரம் செலவிடலாமே என்பதால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

மிஸ் இந்தியா அழகிக்கு ஆசைப்பட்ட நடிகர்..உனக்கு எங்க பொண்ணு கேக்குதான்னு நடிகையின் பெற்றோர்.. | Neha Dhupias Parents Questioned Angad Bedi

உனக்கு எங்க பொண்ணு கேக்குதா

உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று படப்பிடிப்பின்போது நேஹாவிடம் கேட்டேன். நான் பிரபலம் கிடையாது, என்னிடம் பணமில்லை, ஆனால் நீ என்னை திருமணம் செய்து கொண்டால் நான் நிச்சயம் சாதிப்பேன் என்று நேஹாவிடம் கூற அவரோ பதில் சொல்லாமல் பேச்சை மாற்றிவிட்டார்.

படப்பிடிப்பு முடிந்து டெல்லி திரும்பினேன். உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா? என்று நேஹாவின் பெற்றோரிடம் கேட்க முடிவு செய்து சந்தித்தேன்.

நீ நல்ல பையன் தான், ஆனால் உன் பாக்கெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, உனக்கு எங்கள் மகளை கட்டிக்கணுமா என்று கேட்டார்கள். இது என் விருப்பம் என்று நான் சொல்ல, பார்க்கலாம் என்றார்கள். அதன்பின் இருவரும் நல்ல நண்பர்களாகி, அவ்வப்போது சந்தித்து பேசினோம்.

மிஸ் இந்தியா அழகிக்கு ஆசைப்பட்ட நடிகர்..உனக்கு எங்க பொண்ணு கேக்குதான்னு நடிகையின் பெற்றோர்.. | Neha Dhupias Parents Questioned Angad Bedi

ஆளுக்கொரு வழியில் சென்றுவிட்டோம். வேறு ஒருவருடன் என்னை ஜோடி சேர்த்துவைக்க தீபாவளி பார்ட்டிக்கு அழைத்தார் நேஹா. நான் பிசியாக இருக்கிறேன், என் நேரத்தை வீணாக்காதே என்றேன். ஆனாலும் பார்ட்டிக்கு சென்றேன். அங்கு இயக்குநர் கரண் ஜோஹர் இருந்தார். அவர்தான் என்னையும் நேஹாவையும் சேர்த்து வைத்தார்.

எங்கள் வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான இடமுண்டு. அதன்பின் எல்லாம் மாறிவிட்டது. நிச்சயம், திருமணம் எல்லாம் ரொம்ப சீக்கிரமாக முடிந்து வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்று அங்கத் பேடி தெரிவித்தார். அங்கத் பேடியும், நேஹாவும் காதலிப்பது ரகசியமாக இருந்தது. பின் நேஹா தூபியா கர்ப்பமாக இருந்ததால் ஒரு குருத்வாராவில் வைத்து சிம்பிளாக திருமணத்தை முடித்துவிட்டார்கள்.