அஜித் படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை? பயப்படுறாங்க!! பிரபலம் சொன்ன தகவல்...

Ajith Kumar Adhik Ravichandran
By Edward Feb 08, 2026 05:45 AM GMT
Report

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளியானது.

இரு படங்களும் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்பட்டதால், அவரது அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

அஜித் படத்துக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை? பயப்படுறாங்க!! பிரபலம் சொன்ன தகவல்... | Ajith Movie Producer Issues Dhanageyan Open Talk

குட் பேட் அக்லி படத்தால் மொத்தம் 40 கோடி ரூபாய் நஷ்டமாகியதாக தயாரிப்பாளர் கேயார் கூறியதாலும், அஜித் சம்பளமாக 180 கோடி ரூபாய் கேட்கிறார் என்றும் அதனாலும் தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள் என்ற பேச்சும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அளித்த பேட்டியொன்றில் இதுகுறித்து ஓபனாக பேசியுள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை, படம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது.

விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். கண்டிப்பாக பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ ஷூட்டிங் சென்றுவிடுவார்கள். இந்த வருட கடைசியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் அந்தப்படம் ரிலீஸாகும் என்று தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.