இனி ’கடவுளே’ கிடையாது, ’அழகே அஜித்தே’ தான்!! பிரபல நடிகர் போட்ட பதிவு..
அஜித்குமார்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். 2025க்கு அடுத்தடுத்து வெளியாகவுள்ள இப்படங்களின் போஸ்டர்கள் இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபகாலமாக அஜித் அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள், கடவுளே என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தநிலையில் அஜித் அப்படியான செயலில் ஈடுபட வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைமீறியும் ரசிகர்கள் அந்த வார்த்தைகளை வேறுமாதிரியாக பயன்படுத்தி அஜித்தை கொண்டாடி வருகிறார்கள்.
Good Bad Ugly
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்திற்காக அஜித்தின் நியூலுக் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அஜித் மெலிந்து, அட்டகாசம் பட லுக்கில் காணப்படுவதை பார்த்த ரசிகர்கள் அந்த லுக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தோடு அப்படத்தில் நடித்து வரும் நடிகர் பிரசன்னா அழகே அஜித்தே என்ற வார்த்தையை பயன்படுத்தி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இது நன்றாக இருக்கே என்று #GoodBadUgly பட ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.