சீரியல் நடிகர் தினேஷ் நெல்லையில் கைது!! காரணம் இதுதான்..
சீரியல் நடிகர் தினேஷ்
சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பல சீரியல்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானவர் தான் நடிகர் தினேஷ். நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்த தினேஷ், சில காரணங்களால் பல ஆண்டுகள் கழித்து பிரிந்தார்.

அதன்பின் பிக்பாஸ் 7ல் நிகழ்ச்சியில் தினேஷ் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்தார். அதன்பின் ரச்சிதா, தினேஷ் மீது வழக்கு தொடர்ந்த விஷயம் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தினேஷுக்கு இன்னொரு பஞ்சாயத்து வந்திருக்கிறது. அவர் மீது கருணாநிதி என்பவர் புகாரளித்திருக்கிறார்.
தன் மகளிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் பணத்தை திருப்பி கேட்டபோது தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
நெல்லையில் கைது
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தண்டார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், சீரியல் நடிகர் தினேஷ் தன்னுடைய மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 3 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார்.

2022ல் கொடுத்த பணத்தை கேட்ட போதெல்லாம் ஏமாற்றி வந்ததாகவும் ஒருக்கட்டத்தில் பணத்தை கேட்டு போனபோது தன்னை தாக்கியதாகவும் புகார் கொடுத்திர்ந்தார். இந்நிலையில் தினேஷை நெல்லை மாவட்டம் பணகுடி போலிசார் கைது செய்து விசாரணை நடத்ஹ்டி வருகிறார்கள்.