அஜித்தின் அடுத்த படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
Ajith Kumar
Good Bad Ugly
By Kathick
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்கள் வந்தன. இதில் விடாமுயற்சி திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளிவந்தது.
அதே போல் குட் பேட் அக்லி படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கினாராம். இந்த நிலையில், GBU படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்காக அவர் வாங்கவுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தனது அடுத்த படத்திற்காக ரூ. 175 கோடி சம்பளம் வாங்கவுள்ளாராம் அஜித். இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.