மறைந்த விவேக் பற்றி மெளனம் சாதித்த தல அஜித்? அறிக்கை விடாததற்கு இதுதான் காரணமா?

death vivek viswasam ajithkumar
By Edward Apr 19, 2021 05:41 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் சமுக விழிப்புணர்வுகளை செய்து புகழ் பெற்றவர் நடிகர் விவேக். கடந்த ஏப்ரல் 17 மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் இறப்பால் பல பிரபலங்கள் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை கூறியும், அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.

ஆனால் முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் வரவில்லை. விஜய் தற்போது தான் வெளிநாட்டிற்கு சென்று விஜய் 65 படத்தின் படப்பிடிப்பை அரம்பித்தார். அதனால் அவரால் வரமுடியவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தல அஜித் ஒரு அறிக்கை கூட விடாமல் இருந்தது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

அஜித்துடன் சேர்ந்து விவேக் பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக தல அஜித்தின் விசுவாசம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அஜித் வட்டாரங்களில் விவேக் குடும்பத்தினரை தல அஜித் போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்பது போன்ற செய்திகளை கசிய விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலும் அஜித் வந்தால் அந்த இடத்தில் ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும் எனவும், யாருக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் அஜித் வரவில்லை என்கிறார்கள் தல வட்டாரங்கள்.