உடலை வைத்து கிண்டல் செய்த விமர்சனங்கள்! பதிலடி கொடுத்த அஜித்குமார்..
தமிழ் சினிமாவில் டாப் ஆர்டர் நடிகரில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். சில வருடங்களாக பல இன்னல்கள் மத்தியில் எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.
அந்தவகையில் வலிமை படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும், அஜித்தை வைத்து சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி வருகிறது. படத்தை விமர்சிக்கும் சிலர் அஜித்தின் உடல் வாகுவை பற்றி விமர்சித்து வருகிறார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் சுமார் 25 கிலோ எடையை குறைக்கவுள்ளாராம். அதேபோல் சமீபத்தில் ஏகே61 படத்தின் முதல் லுக் வெளியாகியதோடு அது நெகடிவ் ரோலுக்காகது எனது என்று தயாரிப்பாளர் போனிகபூர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் புதிய லுக்கில் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. உடலை பற்றி விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் அஜித் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.




