அஜித்தை சார்னு கூப்பிடு! ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த சமந்தாவின் முன்னாள் காதலன்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்தின் மேல் சினிமா பிரபலங்கள் பெரிய மரியாதை வைத்திருப்பது தெரிந்த விஷயமே. ஆனால் அவரை அவதூறாக பேசும் சிலரை அவரின் ரசிகர்கள் இல்லாது சக நடிகர்களின் ரசிகர்களும் விமர்சித்து வருவார்கள். அப்படி சமீபத்தில் நடிகர் அஜித்தின் பேரை சொல்லி பதிவிட்ட நடிகர் ஒருவரை தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அஜித் விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் சண்டை போடுவது சாதாரணமாக இருக்கும் ஒரு விஷயம். அப்படி சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சித்தார்த் அஜித் எனக்கூறி பதிவிட அதனை பார்த்த ரசிகர் ஒருவர் டேய் முதலில் அவருக்கு மரியாதை கொடு.
இதற்கு அஜித் சார் என கூப்பிடு என எச்சரிக்க அதற்கு சித்தார்த் கூலாக வடிவேலுவின் டயலாக் ஆஹான் என பதிவிட்டு அந்த ரசிகருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார்.
Aahaaan. https://t.co/Il7Kg6nK5o
— Siddharth (@Actor_Siddharth) May 12, 2019