மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர் அஜித் - ஷாலினி.. பயில்வான் போட்டுடைத்த உண்மை

Ajith Kumar Shalini Bayilvan Ranganathan
By Edward Oct 08, 2022 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து கொண்டு பல லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். அமர்க்களம் படத்தின் போது நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார் அஜித்குமார்.

திருமணமாகி இரு குழந்தைகளை பெற்ற ஷாலினி சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்தும் அஜித்திற்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அஜித் - ஷாலினி திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் புதிய செய்தியை கூறியுள்ளார்.

ஷாலினி பிறப்பால் மலையாள கிறித்துவ சமுகத்தை சார்ந்தவர் என்பதால் அஜித் ஷாலினியை இந்துவிற்கு மாற வற்புறுத்தவில்லையாம். அதே சமயம், இந்து முறைப்படி, கிறிஸ்தவ முறைப்படி, முஸ்லீம் முறைப்படி என்று மூன்றுமுறை ஷாலினியை அஜித் திருமணம் செய்து கொண்டாராம்.

மேலும் ஷாலினி பேட்மிட்டன் ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் கொண்டவராக இருந்தால் அவரை அந்த விளையாட்டை ஆடவும் வைத்திருக்கிறார்.

Gallery