விட்டது ஒட்டாது! கோடியில் ஏமாற்றிய தயாரிப்பாளர்! பழிவாங்காமல் உதவி செய்த தல அஜித்!

ajith Chakravarthy citizen vaali mugavari
By Edward Nov 15, 2021 10:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அல்டிமேட் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் பல தோல்விகளை கொடுத்து காணாமல் போய்விடுவேன் என்று எண்ணினேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அஜித். அவரின் ஆரம்பகாலகட்டத்தில் பல படங்கள் தோல்வியடைந்தாலும் ஒருசில படங்களால் மீண்டு வந்திருக்கிறார் அஜித். அவரின் பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர் சக்கரவர்த்தின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வந்தது.

அதில் ராசி படத்திற்கு பிறகு வாலி படம் அவர்களின் கூட்டணியில் பெரிய வரவேற்ப்பும் வசூல் ரீதியாகவும் நல்ல பேர் பெற்றது. இதையடுத்து சிட்டிசன், ரெட், வில்லன் போன்ற படங்களையும் அஜித் சக்கரவர்த்தி தயாரிப்பில் நடித்து கொடுத்தார்.

பின் ஆஞ்சநேயா படத்தில் நடிக்க அப்படம் சரியான ஓடவில்லை. பின் 2005ல் லிங்குசாமி இயக்கத்தில் அந்த கூட்டணி இணைந்தது ஜி படத்தில். ஜி படமும் பெரிய வெற்றி கொடுக்காமலும் இரு படங்களுக்கு சேர்த்து சக்கரவர்த்தி கணக்கு காட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார். பின் சக்கரவர்த்திக்காக 2006ல் வரலாறு படத்தினையும் வில்லன் படத்தினை முடித்து கொடுத்துள்ளார்.

வரலாறு படத்தின் போது சக்கரவர்த்தி ஏமாற்றியது தெரிந்தும் படத்தினை நடித்து முடித்துக்கொடுத்துள்ளார். ஆனால் வரலாறு படத்திற்காக கோடிக்கணக்கில் அஜித் செலவு செய்து வெளியிட்டார். இதன்பின் அப்போவிட்டது இப்போது வரையில் சக்கரவர்த்தியுடன் அஜித் சேராமல் இருந்து வருகிறார்.