வற்புறுத்தி மனைவியை நடிக்க வைத்த அஜித்! நண்பர்களை விட மோசமாக பேசும் ஷாலினி..

Ajith Kumar Shalini
By Edward May 03, 2022 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். எந்தவொரு பின்னணி இல்லாமல் இந்த உயரத்தை தன் உழைப்பால் முன்னுக்கு வந்துள்ளார். அதனால் தான் அவர் மே 1 உழைப்பாளர் தினத்தில் பிறந்தார் என்று பலரால் புகழப்படுவதுண்டு.

51 வயதாகி இருக்கும் அஜித், வலிமை படத்திற்கு பிறகு இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளுக்கு மே 1ல் ரசிகர்கள் பலரின் வாழ்த்துக்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவரை பற்றிய வீடியோக்கள் சம்பவங்கள் அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அதேபோல் மனைவி ஷாலினி பற்றி அஜித் கூறிய வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. பில்லா படத்தின் பிரமோஷனுக்காக அஜித் சந்தானம் எடுத்த நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார்.

பில்லா படத்திற்கு பிறகு யாருடன் நடிக்கவிரும்பம் உள்ளது என்று கேட்டுள்ளார் சந்தானம். அதற்கு அஜித், அமர்களம் படத்திற்கு முதல் ஷாலினி இயக்குனர் கமிட் செய்ய சென்ற போது முடியாது என்று கூறிவிட்டார்.

அதன்பின் இயக்குனர் என்னிடை பேச கூறினார். நானும் கால் செய்து பேசினேன். எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறினேன். முடியாது எனக்கு படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். கடைசி வரை அவரை கமிட் செய்ய ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருமுறை ஷூட்டிங் போது ஸ்மோக் பண்ணுவேன். அப்போது ஷாலினி கோபப்பட்டதால் நான் அதை அப்போதில் இருந்தே விட்டுவிட்டேன். அதன் பின் தான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.

அமர்களம் படத்தின் போது கையை அறுக்கும் காட்சியில் தான் அவர்மீது காதல் தோன்றியது என தெரிவித்துள்ளார் அஜித். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.