அவருக்கு நடிப்பு செட்டாகாது! எஸ்ஜே சூர்யாவை மட்டம் தட்டிய நடிகர் அஜித்?

Ajith Kumar S J Surya
By Edward May 19, 2022 06:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அறிமுகமும் செய்து வைத்திருக்கிறார். அப்படி சிறுத்தை சிவா, எச் வினோத் போன்றவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்பினை தந்துள்ளார்.

அப்படி ஆரம்பகாலக்கட்ட அஜித் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் வாலி. அஜித், சிம்ரன் நடிப்பில் 1999ல் இயக்குனர் எஸ்ஜே சூர்யாவை அறிமுகம் செய்து வைத்த படமாக வாலி அமைந்தது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து எஸ்ஜே சூர்யா நடிகர் விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தினை எடுத்தார்.

இரு சூப்பர் ஹிட் படங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற எஸ்ஜே சூர்யா, அதன்பின் நடிப்பில் இறங்கினார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான படங்கள் சுமாராகத்தான் மக்களிடம் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு பற்றி நடிகர் அஜித் சில ஆண்டுகளுக்கு முன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எஸ்ஜே சூர்யாவிடம் பிடித்தமான ஒன்று இயக்கம். அவரை என்படம் மூலம் அறிமுகம் செய்ததில் பெருமைப்படுவதாகவும் மிகப்பெரிய இயக்குனராக் உருவெடுப்பார் எனவும் தோன்றியது.

ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் காட்டுவது சற்று வருத்தமாகவுள்ளது. நல்ல இயக்குனர் ஏன் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது அஜித் சொன்ன வார்த்தைக்கு புறம்பாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு உச்சத்தை தொட்டு வருகிறார்.

அதிவும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றும் வருகிறது. பெரும்பாலும் அஜித் ஒரு கணிப்பில் கூறினால் சரியாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அஜித் சற்று முரண்பாடான கருத்தினை கூறியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.