அஜித்தை வைத்து இந்தியை திணிக்கிறாரா தயாரிப்பாளர்? இது தெரியாம போச்சே...

valimai ajithkumar hvinoth boneykapoor AK61 zeestudios
By Edward Feb 17, 2022 10:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் கடந்த 2019ல் நடிக்க ஆரம்பித்த படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் ஜீ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். பல கஷ்டங்கள் பிரச்சனைகளுக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் எந்த பிரமோஷனும் இல்லாமல் அமைதியாக காணப்படுவதாக பலர் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமுகவலைத்தளத்தில் பிரமோ வீடியோக்களை வெளியிட்டு டிரெண்ட்டாக்கி வருகிறார்.

அப்படி வெளியிடும் வீடியோவில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சிலர் கூறி வருகிறார்கள். அதாவது பிரமோ வீடியோவில் குறிப்பிடும் மொழிகளில் முதலில் இந்தி முதலிடம் பெற்றுள்ளது தான் இதற்கு காரணம்.

அதன்பின் தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று அமைந்துள்ளது சற்று அதிருப்தியை கொடுத்துள்ளது. பிரமோ வீடியோ நடிகர் அஜித்திற்கு தெரியாமல் விடமாட்டார்கள். அப்படி அஜித் பார்த்தும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறதாம்.

Gallery