கோட் சாதனையை துவம்சம் செய்த அஜித்தின் விடாமுயற்சி.. முதல் நாள் வசூல்..
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி நாளை வெளியாகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விடாமுயற்சி படத்தின் டிக்கெட் பல இடங்களில் விற்பனையாகி வரும் நிலையில் முன்பதிவு டிக்கெட் தொடங்கிய முதல் நாளே விஜய் நடித்த கோட் படத்தைவிட பல படங்கு வசூலித்துள்ளது. கிட்டத்தட்ட முதல் நாளில் மட்டும் பிரபல புக் மை ஷோ மூலம் 45 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.
முதல் நாள் வசூல்
விஜய்யின் கோட் படம் முதல் நாளில் வெறும் 10 ஆயிரம் டிக்கெட் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் விடாமுயற்சி டிக்கெட் விற்பனை வேகம் எடுத்துள்ளதாம்.
இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். ரெட் ஜெயண்ட் நிறுவனம் சுமார் 1000 திரையில் விடாமுயற்சி படத்தை காலை 9 மணி காட்சிகளில் இருந்து ரிலீஸ் செய்யவுள்ளதாம்.
அதன்படி ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டுமே 14 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் விடாமுயற்சி படம் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.