ஓயாமல் வெளிவந்துகொண்டிருக்கும் அஜித்தின் புகைப்படம், வீடியோக்கள்.. இதுல இவருக்கு விளம்பரமே பிடிக்காதாம்
திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித்.
இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஓயாமல் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது அஜித் மாஸாக நடந்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு விளம்பரமே வேண்டாம் என்று கூறும் அஜித்தின் வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் ஓயாமல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
Latest Video of #Ajithkumar sir in UK ?? ?#AK61 pic.twitter.com/KmoxMm6DMv
— ⚔️Arravajith⚔️ (@Arrav38638952) June 29, 2022