மேடையில் வாய்க்கு வந்தபடி உளறி விக்ரமை கடுப்பேற்றிய அஜித்!! பழிவாங்க புது அவதாரம் எடுத்த சியான்...
சினிமாவில் எப்படியாவது பேரும் புகழும் கிடைக்க பல கலைஞர்கள் போராடுவார்கள். அப்படி வளரும் சமயத்தில் தங்களுக்கு போட்டியாக வருபவர்களுக்கு எதிராக மோதிக்கொள்வார்கள். அப்படி தான் தற்போது விஜய் அஜித் மோதல் இருக்கிறது. ஆனால் அஜித்துடன் மோதி ஜெயித்திருக்கிறார் நடிகர் சியான் விக்ரம்.
ஆரம்பகாலக்கட்டத்தில் இரண்டாம் நடிகராகவும் பல படங்களில் நடித்தும் நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் இருந்து வந்தார் விக்ரம். சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து வாய்ப்புகளை அடுத்தடுத்து பெற்று வந்தார் விக்ரம். அப்போது அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் விருதுவிழா ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது அஜித்திற்கு சிறந்த நடிகர் என்ற விருது கொடுக்கப்பட்டு மேடையில் பேச வைத்தனர். மேடையில் விருதினை வாங்கி பேசிய அஜித், இந்த வருடம் சிறந்த நடிகர் விருது வாங்குகிறேன், அடுத்த வருடமும் அதற்கு அடுத்த வருமும் நான் தான் தொடர்ந்து வாங்குவேன் என்று விக்ரமை பார்த்தவாறு கூறியிருக்கிறாராம்.
அதனால் கடுப்பாகி இருக்கிறார் விக்ரம். இதன்பின் வாய்ப்பை கெட்டியாக பிடித்து போராடி, கஷ்டத்தை மனதில் வைத்து வெறிகொண்டு நடித்திருக்கிறார். அப்படி தன் திறமையை நிரூபித்து காட்டி பழித்தீர்த்த படம் தான் சேது. உடலை வருத்தி, தன் திறமையை காட்டி முன்னணி நடிகராக திகழ்ந்து காட்டினார். அதனால் இதுவரை முதல் அஜித் - விக்ரம் எங்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்கிறார்கள்.