படமே முடியல இதுல சிங்கிளா? துணிவு படத்தை வைத்து ரசிகர்களை ஏமாற்றும் அஜித் படக்குழு..
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் நடிப்பில் துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ள நிலையில் ஜிப்ரான் இசையில் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் தயாராகி வருகிறது என்று கூறியிருந்தனர். ஏற்கனவே விஜய்யின் வாரிசு படத்தின் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது.
இப்படியிருக்கையில் துணிவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
அனிருத் பாடி வெளிவர இருக்கும் சில்லா சில்லா பாடலின் ஷூட்டிங்கே இன்னும் ஆரம்பிக்கவில்லையாம்.
இந்த செய்தி அஜித்தின் ரசிகர்களுக்கு குண்டைத்தூக்கி போட்டுள்ளது. 3 நாட்கள் சூட்டிங் நடக்கவுள்ள நிலையில் படத்தின் பாடலின் ஷூட்டே ஆரம்பிக்காமல் ஏன் இப்படி தாமதப்படுத்துகிறார்கள் என்று அஜித் ரசிகர்கள் குழப்பத்துடன் இருந்து வருகிறார்கள்.