வாய்ப்பு கிடைச்சா மட்டும் போதுமா? அஜித் கண்டிஷனுக்கும் அடிபடமும் விக்கி..

ajith valimai anirudh lyca ak62 vigneshhshivan
By Edward Mar 24, 2022 04:31 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் வலிமை படத்திற்கு பிறகு அடுத்த படங்களிம் கமிட்டாகி வருகிறார். சில நாட்கள் குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வரும் அஜித் அடுத்த படத்தின் லுக்கில் மிரட்டி வருகிறார்.

வில்லன் லுக்கில் வெள்ளை தாடியில் அவர் இருக்கும் புதிய லுக்குடன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்த 61வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ள நிலையில் 62 படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் இப்படம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் விக்னேஷ் சிவனுக்கு சில கண்டிஷனை போட்டுள்ளாராம் அஜித். எந்த படமானாலும் சரி அரசியல் வேண்டவே வேண்டாம் என்பார அஜித்.

இதையும் முதல் கண்டிஷனாக கூறியிருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயம் வேண்டும் என்றும் அஜித் கூறியுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் ஓகே பிறகே படம் ஒப்பந்தமானதாம்.

இப்படியொரு படம் உருவாக முக்கியமாக அனிருத் இருந்தே ஆகவேண்டும் என்று அவரையும் புக் செய்துள்ளார் அஜித். இப்படத்திற்காக அஜித் 105 கோடி சம்பளமாக லைக்கா நிறுவனத்திடம் வாங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.