பகத்சிங்கிற்கே சவால் விடுவாரோ! அஜித்தின் வலிமையை காட்டிய ரசிகர்கள்..
valimai
ajithkumar
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் தன்னை தல என்று கூப்பிடக்கூடாது என்றும் அஜித்குமார், ஏகே, அஜித் என்று மட்டுமே கூப்பிட்டால் போதும் என்ற அறிக்கையை வெளியிட்டார்.
அந்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து வலிமை மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டது. மேலும் வலிமை படத்திற்கு யு/ஏ சென்சார் சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள், பகத்சிங்காக அஜித்குமார் என்ற போஸ்டரை பேனர் மூலம் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
அஜித்குமாரை பகத்சிங்கை போன்று எடிடிங் செய்து வருடங்கள் கடந்தாலும் வலிமையும் வரலாறும் அழியாது என்று கூறி போஸ்டரை பகிர்ந்து வருகிறார்கள்.