ஃபேமிலிய பாருங்க. சண்டை போடாதீங்க!! அஜித்குமார் கொடுத்த எமோஷ்னல் பேட்டி..

Ajith Kumar Actors Tamil Actors VidaaMuyarchi Good Bad Ugly
By Edward Jan 12, 2025 07:30 AM GMT
Report

அஜித்குமார்

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது துபாயில் நடந்து வரும் கார் ரேஸிங் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ரேஸிங்கின் போது அவரது கார் விபத்தாகி அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அஜித்துக்கு ஒன்றும் ஆகாமல் இருந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது 24 எச் கார் பந்தய ரேஸில் இருந்து அஜித்குமார் விலகியுள்ளதாகவும் Porsche GT4 போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேட்டி

அஜித் அளித்த பேட்டியில், ரசிகர்களுக்கு தான் கூற வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. அவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ, தான் கடவுளை வேண்டிக்கொள்வதாகவும் ஃபேமிலியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நேரத்தை வீணடிக்க வேண்டாம், நன்றாக படித்து வேலைக்கு செல்பவர்கள் அதில் கவனம் செலுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நமக்கு பிடித்த விஷயங்களை செய்யும்போது தோல்வி ஏற்பட்டால் சோர்ந்துவிட வேண்டாம் என்றும் தன் ரசிகர்கள் சண்டைப்போட்டுக் கொள்ளவேண்டாம் என்றும் இந்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் அஜித்.