MI vs LSG : ஹர்திக் பாண்டியா செயல்களால் கொதித்த ஆகாஷ் அம்பானி.. அதளபாதாளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி..
MI vs LSG
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் 18வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை இந்தியன் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின முதலில் பேட் செய்த லக்னோ அணியினர் 203 ரன்கள் அடித்தது.
இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணியினர் ஆரம்பத்தில் நன்றாக ஆடினாலும் கடைசி ஓவரில் சொதப்பி தோல்வியை சந்தித்தது. அதிலும் அடித்து ஆடவேண்டிய நேரத்தில் ஹார்திக் மற்றும் திலக் வர்மா இருவரும் மோசமான ஆடினர்.
அதில் திலக் வர்மாவால் பவுண்டரி அடிக்க முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஹர்திக் பாண்டியா அவரை ரிட்டயர் அவுட் ஆகுமாறு வற்புறுத்தி அனுப்பி இருக்கிறார். ஆனால் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவால் இலக்கு ரன்களை எடுக்க முடியாமல் போயுள்ளது.
ஹர்திக் பாண்டியா
அதிலும் கடைசி ஓவரில் 4 பந்துகளில் 14 ரன்கள் அடிக்க வேண்டிய இருந்த போது சிங்கிள் எடுக்காமல் இருந்துள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையாகிய நிலையில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவில் செயலை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதை பார்த்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி அதிர்ச்சியில் இருப்பதாகவும் தன் கோபத்தைல் முகத்தில் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த முடிவை மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே தான் எடுத்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
This is how Mumbai Indians fans treated Hardik Pandya in IPL 2024 and #IPL2025❗️#LSGvsMI | #MIvsLSG | #HardikPandya pic.twitter.com/7GB5y12erX
— Siju Moothedath (@SijuMoothedath) April 5, 2025