சிரஞ்சீவி வீட்டிற்கு அருகே ரூ. 100 கோடியில் புதிய வீடு கட்டும் அல்லு அர்ஜுன்..

Allu Arjun Actors
By Karthick Raja Apr 24, 2026 05:30 PM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 படம் உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதன்பின், தற்போது அட்லீ இயக்கத்தில் ராக்கா படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

சிரஞ்சீவி வீட்டிற்கு அருகே ரூ. 100 கோடியில் புதிய வீடு கட்டும் அல்லு அர்ஜுன்.. | Allu Arjun Builds New House

இந்த நிலையில், ஹைதராபாத்தில் 4,000 சதுர அடியில் பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை அல்லு அர்ஜுன் கட்டி வருகிறாராம். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 80 கோடி முதல் ரூ. 100 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸில் நடிகர் சிரஞ்சீவியின் வீட்டிற்கு அருகே, இந்த புதிய வீட்டை அல்லு அர்ஜுன் கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.