காண்டம் வாங்குவதில் என்ன தப்பு? கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருக்கும் கமல் ஹாசனுக்கும் நடிகை சரிகாவுக்கும் பிறந்த இரு பெண் பிள்ளைகள் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளம் வந்து வருகிறார்கள். ஏற்கனவே பின்னணி பாடகியாக இருந்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார் ஸ்ருதி ஹாசன். அவருக்கு பின் நடிகை அவதாரம் எடுத்தார் அக்ஷரா ஹாசன்.
அக்ஷரா ஹாசன் அறிமுகம்:-
தற்போது 30 வயதாகும் அக்ஷரா ஹாசன் இந்தியில் ஷமிதாப் படத்தின் முலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் அஜித்தின் விவேகம் படத்தில் நடாசா என்ற கதாபாத்திரத்திலும் நடிகர் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திலும் நடித்திருப்பார்.
லீட் ரோல் நடிகையாக இதுவரையில் எந்த படத்திலும் நடிக்காத அக்ஷரா ஹாசன் தற்போது இயக்குனர் ராஜா ராமமூர்த்தி என்பரின் அச்சம் மடம் நானம் பயிர்பு படத்தில் நடித்துள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம்தேதி வெளியானது. நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் பிரமோஷனுக்காக அக்ஷரா ஹாசன் பேட்டி கொடுத்து வருகிறார்.
ஒரு பேட்டியில் காண்டம் பெண்கள் வாங்குவது குறித்து பேசியுள்ளார். பெண்கள் பொது இடத்தில் நேப்கின் வாங்குவது கூட கூச்சப்பட்டு தான் வாங்க முடிகிறது. அப்படி பெண்கள் சமுகத்தில் எந்த பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதை காட்டும் படம் தான் இது. நாம் ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று காண்டம் வாங்கினார் என்ன தப்பு இருக்கிறது. பாதுகாப்பாக உடலுறவு செய்யத்தானே வாங்குகிறோம் என்று கூறியுள்ளார் அக்ஷரா ஹாசன்.