கமல் மகளின் ரகசியங்களை தெரிந்த ஒரே ஆள் இவர்தான்? துளி கூட கசியப்படாது?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தில் இருப்பவர் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன்.

அவரை போல் எப்படியாவது நடிப்பில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று போல்ட்டான ரோல்களில் நடித்தும் பெரிய முன்னேற்றத்தை காணமுடியாமல் தவித்து வருகிறார் இரண்டாம் மகள் அக்ஷரா ஹாசன். அஜித்தின் விவேகம், விக்ரமின் கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார் அக்ஷரா.

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த சமீதாப் படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். அவர் நடித்த படங்கள் வரவேற்பு பெற்றாலும் அக்ஷரா பெரியளவில் பேசப்படவில்லை. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா நடிப்பில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் படுமோசமான காட்சிகளில் கூட நடித்து பெரிய ஹிட்டாகவில்லை.
இதையடுத்து போட்டோஷூட் புகைப்படங்கள் தினமும் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் அக்ஷரா ஹாசன் தன்னுடைய ரகசியங்களை சொல்லும் ஒரே ஆள் என் பெஸ்டி தான் என்று அவர் வளர்க்கும் நாயுடன் எடுத்த புகைப்படத்தோடு ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார்.