பகிரங்க மன்னிப்பு கேட்ட ரஜினியின் 2.0 வில்லன்! வாங்கிய அடி அப்படி
சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய் குமார். அவர் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
அக்ஷய் குமார் ஒரு பான் மசாலா விளம்பரத்தில் நடித்தது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
சில வருடங்களுக்கு முன்பு அக்ஷய் குமார் அளித்த பேட்டி ஒன்றில் தான் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இப்படி பான் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறினார். அப்படி பேசிய அக்ஷய் 'அது வேற வாய்' என சொல்லிவிட்டு தற்போது ஒரு பான் மசாலா விளம்பரத்தில் ஷாருக், அஜய் தேவ்கன் உடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.

இதனால் நெட்டிசன்கள் அக்ஷய் குமாரை வறுத்தெடுக்க, தற்போது அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த விளம்பரத்தில் நடித்ததற்காக பணத்தை வேறு ஒரு நல்ல காரியத்திற்கு கொடுத்துவிடுகிறேன் எனவும் கூறி உள்ளார்.
ஒரே நாள் நெட்டிசன்கள் அடித்த அடியில் அக்ஷய் குமார் இப்படி பகிரங்க மன்னிப்பு கேட்டிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
— Akshay Kumar (@akshaykumar) April 20, 2022