10 நிமிஷம் நடிச்சுட்டு இயக்குனருடன் சண்டை போட்ட பாலிவுட் நடிகை.. ஆனால், இப்போ

ram charan rajamouli alia bhatt junior ntr
By Kathick Apr 01, 2022 01:00 AM GMT
Report

RRR படத்தில் சில காட்சிகள் மட்டுமே வந்தது போல் காட்டியதால், ராஜமௌலி மீது அதிருப்தியில் நடிகை ஆலியா பட் இருக்கிறார் என, சமீபத்தில் பெரும் சர்ச்சை சமுக வலைத்தளங்களில் எழுந்தது. அதற்கு, முக்கிய காரணமாக RRR படக்குழுவுடன் ஆலியா பட் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து தீடீரென நீக்கியது தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அனைத்து சர்ச்சைக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில், நடிகை ஆலியா பட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை சில நாட்கள் மட்டுமே வைத்துக்கொள்வேன் என்றும், அதன்பின் அவைகளை நீக்கிவிடுவேன், இதுவே எனது வழக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கும் ராஜமௌலிக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு RRR படத்தில் நடித்தது சந்தோசம் தான். ராம் சரண் மற்றும் தாரக்குடன் நடித்ததும் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் ஆலியா பட்.

10 நிமிஷம் நடிச்சுட்டு இயக்குனருடன் சண்டை போட்ட பாலிவுட் நடிகை.. ஆனால், இப்போ | Alia Bhatt About Her Fight With Rajamouli