திருமணம் ஆகி 6 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த ஆலியா பட்.. ஷாக்கான ரசிகர்கள்
Alia Bhatt
Ranbir Kapoor
By Karthick Raja
ஆலியா பட் - ரன்பீர் கபூர்
ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன்பின் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. செய்திகள் வெளிவர துவங்கிய பின் ஆலியா பட் கர்ப்பமாக தான் இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நேற்று இரவு பிரசவ வலியில் இருந்த ஆலியா பட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலரும் இந்த செய்தியை அறிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், திருமணம் ஆகி 7 மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறாத நிலையில், ஆலியா பட் குழந்தை பிறந்துள்ளதே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.