வெளியே போங்க..இது ஒன்னும் உங்க வீடு இல்ல!! வீடியோ எடுத்தவர்களிடம் கத்திய நடிகை ஆலியா பட்...

Viral Video Alia Bhatt Bollywood Indian Actress
By Edward Aug 17, 2025 08:30 AM GMT
Report

ஆலியா பட்

பாலிவுட் திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக உருவெடுத்துள்ளவர் தான் நடிகை ஆலியா பட்.

திரைத்துறையில் பொதுவெளியில் வரும் போது புகைப்பட கலைஞர்கள் அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை வீடியோ எடுப்பதையும் புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

வெளியே போங்க..இது ஒன்னும் உங்க வீடு இல்ல!! வீடியோ எடுத்தவர்களிடம் கத்திய நடிகை ஆலியா பட்... | Alia Bhatt Loses Cool Paps As They Enter Building

இதற்கு சிலர் அசெளகரியமாக சூழலுக்கு தள்ளப்பட்டு முகம் சுழித்து செல்வார்கள். அந்தவகையில் நடிகை ஆலியா பட் டென்னிஸ் விளையாட வெளியில் சென்றபோது, காரில் இறங்கியவுடன் புகைப்பட கலைஞர்களால் சூழப்பட்டு கடும் சங்கடத்திற்கு ஆளாகினார்.

ஆலியாவுடன் கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை பார்த்து கோபப்பட்ட ஆலியா, உள்ளே வராதீர்கள், தயவுசெய்து வெளியே செல்லுங்கள்.

இது உங்கள் வீடு அல்ல என்று கூறி சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், இப்படி பிரபலங்களை புகைப்படங்களுக்காக துன்புறுத்துவது சரியல்ல என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.