கணவரை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கும் 31 வயது நடிகை.. யார் தெரியுமா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் ஆலியா பட். இவரை பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
உலகளவில் பிரபலமான இந்திய நடிகையான இவர், கடந்த 2022ம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஹா எனும் அழகிய மகள் உள்ளார்.
திருமணத்திற்கு பின்பும் முன்னணி நடிகையாக பாலிவுட் கலக்கிக்கொண்டிருக்கும் ஆலியா பட், தனது கணவரை விட அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரியாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஆலியா பட்டின் சொத்து மடிப்பு ரூ. 517 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு ரூ. 203 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் கணவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஆலியா பட் இருக்கிறார் என கூறுகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.