அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்க்கலாமா? வைரல் வீடியோவால் ஆலியா பட் ஆவேசம்!
ஆலியா பட்
19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஆலியா பட். Student of the Year திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரசிகர்ளை கவரும் வகையில் நடித்து வந்த ஆலியா பட் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.
ஆவேசம்!
இந்நிலையில் தாங்கள் கட்டி வரும் சொகுசு வீட்டின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இது Privacyயை பாதிக்கிறது எனக் குறிப்பிட்டு ஆலியா பட் ஆவேசமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில், " மும்பையில் இடம் குறைவாக இருக்கிறது என்பது உண்மைதான், ஒரு வீட்டின் ஜன்னல் அடுத்த வீட்டை பார்த்தபடி தான் இருக்கும்.
ஆனால் அதற்காக வீடியோ எடுத்து அதை வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வீடியோக்களை உடனே நீக்கி விடுங்கள்" என்று பகிர்ந்துள்ளார்.