ஜாய் கிரிஸில்டா, போட்டோ, வீடியோ லீக் செய்வேன்னு மிரட்டினார்!! மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை..
ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், சில மாதங்களுக்கு ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது.

தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றும் ஜாய் கிரிஸில்டா இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டார். இது நடந்து சில வாரங்களில் தன்னை ஏமாற்றிவிட்டார் ரங்கராஜ் என்று புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினர் கிரிஸில்டா.
நடந்துமுடிந்த விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை 2வது திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையின் தந்தை தான்தான் என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ரங்கராஜ் அறிக்கை
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.
ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம், மிரட்டலின் பேரில் நடந்தது.
இந்த திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது என விளக்கத்தை அளித்துள்ளார்.