10 நிமிஷத்துக்கு 8 கோடி சம்பளம்! RRR படத்தால் கோபத்தில் ஆலியா பட் செய்த செயல்

boxoffice RRR ramcharan aliabhatt ssrajamouli juniorNTR
By Edward Mar 29, 2022 03:00 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனராக இந்தியா முழுவதும் பெரியளவில் பேசப்படும் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி . பாகுபலி படத்திற்கு பிறகு ராம்சரண், ஜூனியர் NTRஐ வைத்து RRR என்ற படத்தினை இயக்கி இருந்தார். படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்து இருந்தனர்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக படம் மார்ச் 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான RRR படம் இதுவரையில் 500 கோடியை மூன்றே நாளில் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இப்படத்திற்காக நடிகர் ராம் சரண், ஜூனியர் NTR சம்பளம் தலா 75 கோடி அளவில் பெற்றுள்ளார்களாம். மேலும் அஜய் தேவ்கன் 35 கோடியும், ஆலியா பட் 8 கோடியும் வாங்கியுள்ளாராம். இப்படத்தின் மற்ற வேலைகளை பார்த்தவர்களுக்கு 20 கோடி உட்பட 208 கோடிகள் சம்பளமாகவே சென்றுள்ளது.

மேலும் இயக்குனர் ராஜமெளலியின் சம்பளமாக எதுவும் வாங்கவில்லை என்றும் படத்தின் வசூலை பொருத்து ஒருசில பங்கினை பெறவுள்ளாராம். இந்நிலையில் நடிகை ஆலியா பட் படத்தினை பார்த்து தன் காட்சிகளால் சங்கடத்தில் இருந்து வருகிறாராம்.

தன்னுடைய காட்சிகள் சில நிமிடங்களை இயக்குனர் ராஜமெளலி கட் செய்துவிட்டார் என்பதுதான் அந்த பிரச்சனைக்கு காரணமாம். இதனால் ஆலியாபட் ராஜமெளலியை அன்பாலோ செய்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் ஆலியா ராஜமெளலியை இன்னும் பாலோ செய்து தான் வருகிறாராம். தற்போது வட இந்தியாவில் மட்டும் 110 கோடி ரூபாயை வசூத்திருக்கிறது RRR படம்.