பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு.. தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளரின் குற்றச்சாட்டு விவாகரம்..

Gossip Today Indian Actress Deepika Padukone Prabhas Actress
By Jai Aug 22, 2026 09:15 AM GMT
Report

தீபிகா படுகோன் - ஸ்பிரிட்

ஸ்பிரிட் என்ற படத்தை பிரபாஸ் கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. படத்தின் நாயகியாக முதலில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தீபிகா படுகோன் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகினார்.

பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு.. தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளரின் குற்றச்சாட்டு விவாகரம்.. | Allegations Against Deepika New Controversy

அதற்கு காரணங்கள் பல கூறப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா விளக்கத்தை சமீபத்திய பேட்டியில் கொடுத்தார். தீபிகாவின் சம்பள எதிர்பார்ப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயம் இருந்தது. அதேபோல், ஷூட்டிங்கில் அவர் செலவிடும் நேரம் குறித்தும் சில நிபந்தனைகள் இருந்தது.

படத்தின் வெளியீட்டுக்குப்பின் கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். தெலுங்கு வசனங்களை பேசுவது தொடர்பான விவகாரமும் அவர் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்று கூறியிருந்தார்.

பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு.. தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளரின் குற்றச்சாட்டு விவாகரம்.. | Allegations Against Deepika New Controversy

இந்நிலையில், பிரணய் ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு தீபிகா எந்த விளக்கத்தையும் கொடுக்காத நிலையில் சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட ஒரு பதிவினை தீபிகா படுகோன் லைக் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒரு பெண், திரைப்பட ஒப்பந்தத்தை நிராகரித்ததற்கு தீபிகா மீது இவ்வளவு கோபம் காட்டப்படுவது ஆண் அகபாவத்தின் வெளிப்பாடு என்று பதிவிட்டுள்ளார்.

பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு.. தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளரின் குற்றச்சாட்டு விவாகரம்.. | Allegations Against Deepika New Controversy

ஆண் இதுபோன்ற கோரிகையை கூறினால், அதை தொழில்முறை அணுகுமுறை என்று எடுக்கும் சிலர், பெண் அதேபோன்று கேட்டால் அவர்களை அடம்பிடிப்பவர்கள் போன் சித்தரிப்பதா? இது தொழில்முறை சார்ந்த பிரச்சனை என்பதைவிட பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார் அந்த பெண்.

இதற்கு நடிகை தீபிகா படுகோன் லைக் செய்திருக்கிறார். பிரணய் ரெட்டி வங்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளாரோ தீபிகா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.