அண்ணாத்த மாஸ்டர் படம் கூட இப்படியில்ல! சமந்தாவால் சதம் அடித்த புஷ்பா..

samantha pushpa alluarjun
By Edward Dec 19, 2021 08:10 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் படங்களை கடந்த இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு தியேட்டர்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அதில் மாஸ்டர், டாக்டர், அண்ணாத்த, மாநாடு, கர்ணன் போன்ற தமிழ் படங்களில் இந்த வருடத்தில் வெளியானது.

இப்படங்களின் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருவதை தற்போது தமிழ் படங்களின் மார்க்கெட்டினை அதிரவைத்துள்ளது தெலுங்கு சினிமாவின் படங்கள். மரைக்காயர், ஆர் ஆர் ஆர், புஷ்பா போன்ற படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்து தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடித்து புஷ்பா படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகியது. அதில் நடிகை சமந்தாவின் ஓ சொல்றியா மாமா பாடல் தான் தற்போதைய டிரெண்டிங்.

அப்பாடலுக்காகவே ரசிகர்கள் படத்தினை பார்க்க வருகிறார்கள் என்று விமர்சன வீடியோக்கள் மூலம் தெரிகிறது. இந்நிலையில் புஷ்பா படம் இரு நாட்களில் 100 கோடி வசூலை மொத்தமாக பெற்றுள்ளது என்ற செய்து வெளியாகியுள்ளது.