என்னது புஷ்பா வசூல் 2003 கோடியா! அண்ணாத்த பாகுபலிலாம் ஓரமா போங்க!

samantha boxoffice pushpa alluarjun rashmikamandanna
By Edward Dec 22, 2021 05:38 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இப்படம் 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்று வருவதாகவும் வசூல் ரீதியாக வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாக் ஆபிஸை கேட்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்படத்தின் சக்ஸ்ர்ஸ் மீட்டிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. நிகழ்ச்சியை தொகுப்பாளினி உதய பாணு தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது புஷ்பா படம் வசூல் சாதனை பெற்று 2003 கோடி வசூல் செய்துள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

203 கோடி வசூலை உதய பாணு 2003 கோடி என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்திய படங்களில் வசூல் 4 நாட்களில் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது என்று பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.