திருமணத்திற்கு முன் 6, 7 முறை பிரேக்கப் ஆச்சு..கிழிச்சுப்பேன்!! நடிகை ஆல்யா மானசா..

Alya Manasa Sanjeev Karthick Relationship Tamil Actress Actress
By Jai Nov 24, 2026 02:15 PM GMT
Report

சின்னத்திரையில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆல்யா மானசா, தன்னுடைய கடந்தகால காதல் பற்றியும் ஆறுமுறை காதல் முறிவுகள் ஏற்பட்டு தான் சந்தித்த துன்புறுத்தல் பற்றியும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

திருமணத்திற்கு முன் 6, 7 முறை பிரேக்கப் ஆச்சு..கிழிச்சுப்பேன்!! நடிகை ஆல்யா மானசா.. | Alya Manasa 6 Breakups Love Failure Before Sanjeev

ஆல்யா மானசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இந்த தொடரில் செம்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்த ஆல்யா, 2019ல் நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதிகளுக்கு அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். நடிப்பை தாண்டி யூடியூப் சேனல் மூலமும் சம்பாதித்து வரும் ஆல்யா, பேட்டியொன்றில் தன்னுடைய கடந்த கால காதல் முறிவுகள் பற்றி பேசியுள்ளார்.

திருமணத்திற்கு முன் 6, 7 முறை பிரேக்கப் ஆச்சு..கிழிச்சுப்பேன்!! நடிகை ஆல்யா மானசா.. | Alya Manasa 6 Breakups Love Failure Before Sanjeev

6, 7 முறை பிரேக்கப் ஆச்சு

அதில், என்னுடைய வாழ்க்கையில் இதுவரை 6 முறை காதல் முறிவுகளை சந்தித்து இருக்கிறேன். நான் உண்மையாகவே ஒருவரை காதலித்தேன், ஆனால் அந்த காதல் ஒருதலை காதலாக முடிந்துவிட்டது. நான் ஆழமாக நேசித்த நபர் என்னை நிராகரித்தார், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் மனதளவில் மிகவும் உடைந்து போனேன்.

அச்சுழலில் என்னை நானே காயப்படுத்திக் கொள்ளும் எண்ணங்கள் கூட எனக்கு வந்தது. கைகளில் கிழித்துக் கொள்வது போன்று ஏதாவது செய்வேன். சில உறவுகளில் நான் உண்மையாகவும் முழுமையாகவும் இருந்தேன், ஆனால் ஆப்போசிட்டில் இருந்தவர்கள் அதே அளவிலான அன்பையும் அர்ப்பணிப்பையும் எனக்கு கொடுக்கவில்லை.

இதனால் அடுத்தடுத்த காதல் உறவுகளிலும் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி இருந்தது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.