மற்ற துறையிலும் இப்படியா இல்லையா? பயில்வானுக்கு பதிலடி கொடுத்த சீரியல் நடிகை ஆலியா மானசா...

Serials Alya Manasa
By Edward Jun 08, 2022 08:30 PM GMT
Report

சினிமாத்துறையில் நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை பேசியும் லீக் செய்தும் பலர் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்படி தமிழ் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கூச்சமில்லாமல் யூடியூப்பில் பகிர்ந்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

பத்திரிக்கையாளரும் நடிகருமான சினிமாத்துறையில் பணியாற்றி நட்சத்திரங்களை ஒருவரையும் விட்டுவைக்காமல் அவதூறாகவும் ஆபாசமுறையில் விமர்சித்து பேசி வருகிறார். இதுகுறித்து பலர் எதிர்த்து கருத்துக்களை கூறியும் புகாரளித்தும் வந்துள்ளனர்.

சமீபத்தில் கூட தன்னை பைத்தியம், யார் கூப்பிட்டாலும் அந்த விசயத்தை செய்வாள் என்றெல்லாம் பேசிய பயில்வானை பிரபல பாடகி சின்மயி படுமோசமான கால் செய்து திட்டினார். அவரை தொடர்ந்து சீரியல் நடிகை ஆலியா மானசாவிடமும், பயில்வானின் செய்கை பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஆல்யா மானசா, மற்றத்துறையில் என்னுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களா இல்லையா சண்டை நடக்காமல் இருக்கிறதா? லவ் இல்லாமலா இருக்கிறது. இதுகுறித்து எதுவும் வெளியில் வராது.

ஆனால் சினிமாத்துறையில் நடந்தால் மட்டும் இப்படி பாவம் செய்தோம் என்று அவர் கூறுவது எல்லோரும் ஒப்புக்கொள்ளப்போகிறார்களா என்ன?. அவர் பேசுவது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.