சொகுசு காரில் பிறந்தநாள் கொண்டாடிய ஆல்யா மானசா! அதுவும் எந்த நாட்டில் பாருங்க

Viral Video Alya Manasa Actress
By Bhavya May 28, 2025 02:30 PM GMT
Report

ஆல்யா மானசா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக, ராஜா ராணி 2 மூலம் சந்தியாவாக, சன் டிவியில் ஒளிபரப்பான இனியா தொடர் மூலம் இனியாவாக மக்களை கவர்ந்து வந்தவர் ஆல்யா மானசா.

சன் டிவியின் இனியா தொடர் முடிந்ததில் இருந்து அவர் எந்த தொலைக்காட்சி சீரியலில் கமிட்டாவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

சொகுசு காரில் பிறந்தநாள் கொண்டாடிய ஆல்யா மானசா! அதுவும் எந்த நாட்டில் பாருங்க | Alya Manasa Birthday Celebration Video In Dubai

எந்த நாட்டில்?

இந்நிலையில், சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடி உள்ளார். ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் தற்போது ஜோடியாக கிளியோபட்ரா என்ற பாடலில் நடித்து இருக்கின்றனர்.

அது நேற்று ரிலீஸ் ஆகி இருந்தது. ஆல்யாவின் பிறந்தநாளை நேற்று சஞ்சீவ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் துபாயில் சொகுசு காரில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,