அய்யோ அது நாங்க இல்லைங்க... போலீஸில் சரண் அடைந்த சீரியல் நடிகை
Alya Manasa
By Yathrika
ஆல்யா மானசா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா.
இவர் எம்எல்எம் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறி நிறுவனத்தில் இருப்பவர்கள் மற்ற பிரபலங்களுக்கு போன் செய்து அணுகியுள்ளனர். போன் வந்த பிரபலங்கள் ஆல்யா மானசாவிற்கு போன் செய்து இதுகுறித்து கேட்டுள்ளனர்.
எம்எல்எம் நிறுவனம் பற்றி தெரியாத ஆல்யா மானசா அய்யோ அது நான் இல்லை எந்த நிறுவனத்திலும் நான் முதலீடு செய்யவில்லை நம்பவேண்டாம் என தன்னை கேட்டவர்களை உஷார்படுத்தியுள்ளார்.
பின் தனது கணவர் சஞ்சீவுடன் இணைந்து சைபர் கிரைமிலும் தனது பெயர் வைத்து மோசடி நடக்கிறது என்றும் புகார் அளித்துள்ளார்.