நடிகருடன் எல்லை மீறும் காட்சியில் நடிகை ஆல்யா மானசா.. இதெல்லாம் ரொம்ப தப்பு ஆல்யா
சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஐலா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பின் கொஞ்சம் காலம் திரைவாழ்க்கைக்கு டாட்டா கட்டியிருந்த நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி 2 மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆல்யா மானசாவிற்கு ஜோடியாக சித்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், நாளுக்கு நாள் ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில், ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கம் காட்டி நடித்து வருகிறார். அதிலும் கடந்த இரண்டு வாரமாக ஒரே ரொமான்ஸ் தான். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குத் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். இதெல்லாம் ரொம்ப தப்பு ஆல்யா என்றும் ரசிகர்கள் பலரும் கமெண்ட் கூறி வருகிறார்கள்.