என்னது ஆலியா மான்சாவுக்கு வேறொரு திருமணம் முடிஞ்சதா!! மனைவியால் ஷாக்கான நடிகர் சஞ்சீவ்..
பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்கள் ஆலியா மானசா - சஞ்சீவ். ரீல் ஜோடிகளாக சீரியலில் நடித்து ஈர்த்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இரு குழந்தைகளை பெற்று ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகி வேறொரு தொலைக்காட்சியில் இனியா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆலியா. இந்நிலையில் எப்போது மனைவியின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று, ஆலியாவை பார்த்து கணவர் சஞ்சீவ் ஹாய் சொல்லியுள்ளார்.
அதற்கு ஆலியா ஹாய் ப்ரோ(அண்ணன்) என்றும் என்னது அண்ணாவா என்று கேட்டதற்கு எனக்கு சீரியலில் வேறொருவருடன் திருமணம் முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். மனைவி தன்னை ப்ரோ என்று கூப்பிட்டதை கேட்டு சஞ்சீவ் ஷாக்காகி கோபப்பட்டுள்ளார்.
அதற்கு பழிவாங்க சஞ்சீவ் நாங்க படத்துக்கு போகிறோம் என்று கிண்டல் செய்துள்ளார். இதனால் வறுத்தப்பட்ட ஆலியா, நீ என்னுடைய அப்பா, அம்மா, அண்ணன், காதலர் எல்லாமே தான் அப்பு என்று கூறி சமாளித்துள்ளார். அவர் பேசிய இந்த விடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.