ஒயின் பாட்டிலுடன் ஆட்டம் போடும் நடிகை அமலா பால்.. கணவர் செய்ததை பாருங்க!
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

ஒயின் பாட்டிலுடன் ஆட்டம்!
இந்நிலையில், நடிகை அமலா பால் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தற்போது அமலா பால் வெளிநாட்டிற்குச் சென்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது கணவர் தேசாய், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு கையில் பெரிய ஒயின் பாட்டிலையும், மற்றொரு கையில் கிளாசையும் வைத்துக் கொண்டு அமலா பால் நிற்கிறார். தற்போது இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
